எனது பெயர் Pastor Caleb Kulanathan. நான் இந்து சமயத்தில் பக்தி நிறைந்த குடும்பத்தில் பிறந்தேன். 8 வயதில் எனது அன்புத் தாயை இழந்தேன். அதன் பின்பு அநேக கஷ்டங்க‌ளினுாடாக வளா்க்கப்பட்டேன். ஆனாலும் எனது விக்கிரக ஆராதனையினுள்ள தெய்வ பக்தியை நான் விட்டு விலகவில்லை. 1980ம் ஆண்டு இலங்கை தேசத்தை விட்டு ஜ‌ோ்மன் தேசத்திற்குள் அடைக்கலம் புகுந்தேன். எந்த ஆறுதலும், அன்பும், சமாதானமும் இல்லாத ஒரு நபராக வாழ்ந்துவந்தேன். எப்படியெல்லாம் தேவனை வழிபடவேண்டுமோ என் விருப்பப்படியே, பக்தி நிறைந்து காணப்பட்டேன். நான் பிடிக்காத விரதங்கள் இல்லை. அப்படியான ஒரு பக்தி நிறைந்து காணப்பட்டும் ஒரு சமதானமும் அற்றவனாக வாழ்க்கைப்பயணத்தை ஓடிக்கொண்டே இருந்தேன்.

நான் வழிபடும் தெய்வம் எனக்கு சமாதானம், சந்தோஷம் தரும் என்று நினைத்தேன். 1983ம் ஆண்டு ஜேர்மன் தேசத்தை விட்டு கனடா நாட்டிற்குள் அடைக்கலம் புகுந்தேன். எனது அண்ணா எனக்கு திருமணம் பேச்சை தொடக்கி பேசிவைத்தார். ஒரு கிறிஸ்தவப் பெண்ணை 1983 மார்க‌ழி மாதம் கனடாவில் Presberian Church Pastor. Zabo  அவர்கள் நடத்தி வைத்தார்கள். ஆனாலும் எனது விக்கிரக ஆராதனையை நான் விடாமல் தொடர்ந்தும் விக்கிரகங்களை ஆராதித்து வந்தேன். ஒரு நாள் ஒரு வயது சென்ற தாயாரும், என் மனைவியும் என்னை Lasalle Pentecost Churchக்கு Easter Programக்கு அழைத்துச் சென்றார்கள். இயேசு கிறிஸ்து உயி்ர்த்தெழுந்த காட்சியை அங்கே வாலிபா்கள் நடித்துக் காட்டினார்கள். உண்மையிலே ஒரு அதிசய அற்புத காட்சியாக என் உள்ளத்தில் தொடப்பட்டேன். ஆனாலும் ஆராதனை முடிந்த வீட்டிற்கு சென்றதும் எனது பழைய விக்கிரக  ஆராதனையை நான் விடாமல் பக்தியிலும், விரதத்திலும், எனக்கு விடுதலை உண்டு என்று நினைத்து ஓடிக்கொண்டே இருந்தேன். ஏதோ ஒரு விதத்தில் எனக்கு விரக்தியும், சமாதானமும், மகிழ்ச்சியும் அற்றவ‌னாகக் காணப்பட்டேன். எனது மனைவி தெய்வ பயத்தொடு வாழ்ந்து வந்தவள். எனக்கு எத்தனையோ புத்திமதிகளைக் கூறியும் நான் என் பிடிவாதத்தில் சமாதானமற்றவனாகவே வாழ்ந்து வந்தேன். 1984ம் ஆண்டு கார்த்திகை  மாதம் 14ந் திகதி எனது மனைவிக்கு குழந்தை பிறப்பதற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள், குறித்த நேரத்தில் குழந்தை பிறக்கவில்லை. 3-4 மருத்துவர்கள் எனது மனைவியை சுற்றி சூழ்ந்திருந்தார்கள். நானோ பயத்தினால் தூரத்திலே வெளியில் நின்று கொண்டேன். என் மனைவிக்கு அருகில் சூரியக்கா என்ற ஒரு சகோதரி ஜெபித்துக்கொண்டே நின்றாள். கடைசியாக மருத்துவர்கள் கூறிவிட்டார்கள் மனிவி அல்லது குழந்தை மட்டுமே உயிரோடு தப்புவார்கள், ஆனாலும் உயிருக்கு ஆபத்து என்று கைகளை விரித்தார்கள். என் மனைவி கண் கலங்கினவளாக ஜீவனுள்ள தேவனை நோக்கி ஒரு வாக்கு கொடுத்தாள். நான் வீடு செல்லும் போது என் கணவனை ஒரு நல்ல கிறிஸ்தவ கணவனாகக் காண்பேன். நீரே அற்புதர் என்று என் கணவன் காணும்படி செய்யும் என்ற வாக்கை தேவனிடம் கொடுத்தாள். மனைவிக்கு அருகில் இருந்த சகோதரி சூரியக்கா என்னிடம் வந்து கூறினாள்:" குலநாதன், ஆபத்து! உங்கள் கையில் தான் எல்லாம் உண்டு. ஜீவ‌னுள்ள தேவனை கூப்பிடுங்க, அற்புதத்தின் தேவன் நிச்சயமாய் அற்புதம் செய்வார் என்று அவள் கூறினவுடன் என் மனைவியும், குழந்தையும் உயிருடன் காணப்படவேண்டும் என்ற நோக்கத்தோடு ஆம் என்று தலையை ஆட்டினேன். என்ன ஆச்சரியம்! அற்புதமாக அந்நேரமே குழந்தை சுகப்பெலத்தோடு பிறந்து விட்டது. மருத்துவர்கள் எல்லோருக்கும் ஆச்சரியம். அதன் பின்பு நான் வீட்டிற்கு சென்று விக்கிரகக் கடவுளை பார்த்து எந்த தெய்வம் உண்மையுள்ள , ஜீவனுள்ள தேவன் என்று கேட்டு ஜீவனுள்ள தேவன் எனக்கு தரிசனமாகி என்னோடு பேசட்டும் அல்லது விக்கிரகங்களையே தொழுது கொள்வேன் என்று சவால்விட்டேன். அதன் பின் நான் படுத்து துாங்கிவிட்டேன். திடீர்ரென்று பார்க்க முடியாத ஒரு பெரிய வெளிச்சம் என் அறையினுள் நுழைந்தது. ஒரு சத்தம் “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாக இருக்கிறேன்”. 3 தடவை மெல்லிய குரலில் கூறியது என்னை திகைக்க வைத்தது. இந்த வசனம் வேதப்புத்தகத்தில் இருப்பதை பின்பு அறிந்தேன். கண்விழித்தேன், எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அந்நேரமே என்னிடம் இருந்த அத்தனை விக்கிரக தெய்வங்களையும் ஒரு bag இல் கட்டி எறிந்து விட்டேன். எல்லாவற்றையும் அகற்றிவிட்டேன். எனக்கு யாரும் கற்றுக்கொடுக்கவில்லை. ஜீவனுள்ள தேவனின் சத்தத்திற்கு கீழ்ப்படிந்தேன். அதிகாலை எழுந்ததும் என்னால் அந்தக் காட்ச்சியையும், சத்தத்தையும் மறக்கவே முடியவில்லை. ஒரு சமாதானம், மகிழ்ச்சி என்னிடம் காணப்பட்டது. நான் எனது மனைவியையும் குழந்தயையும் வீட்டிற்கு அழைத்து வருவதற்காகப் புறப்பட்டேன். அந்நேரம் கடித காரன் என்னிடம் ஒரு கடிதத்தை கையில் கொடுத்தான். நான் அக்கடிதத்துடன் ஆஸ்பத்திரிக்கு சென்று மனைவியிடம் கொடுத்தேன். மனைவி அக்கடிதத்தை விரித்ததும் அதில் எழுதப்பட்டிருந்தது: “இக்கடிதம் உன் கையில் கிடைக்கும் போது, உன் கணவன் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கிற ஒரு அன்பு மகனாக காண்பாய்”. அக்கடிதத்தை எழுதியது வேரு யாருமல்ல, இந்தியாவிலும் உலகமெங்கும் வல்லமையாக பாவிக்கப்படும் சகோதரன் டி.ஐி.எஸ் தினகரன்அவர்களின் கடிதம். (அன்புள்ள, ஆவிக்குறிய தெய்வபயமுள்ள ஒரு அன்பு ஊழியக்காரன்) அதன் பின்பு அநேக ஆவிக்குறிய காரியங்களை நானும் எனது மனைவியும் சகோதரன் டி.ஐி.எஸ் தினகரன் ஊடாகக் கற்றுக்கொண்டோம். longueuil இல் ஒரு ஆவிக்குரிய சபையில் வளர்க்கப்பட்டொம். அதன் பின்பு 8 மாதம் புதுவாழ்வின் ஐக்கிய சபையில் அநேக உதவிகளை செய்து அநேக மக்களை தேவனுக்காக ஆதாயப்படுதினோம்.1987ம் ஆண்டு  Nazarane Pastor Hajian ஊடாக அநேக மக்களை தேவனுக்கு அழைத்துக்கொண்டோம். தேவன் என்னூடாக அநேக காரியங்களையும், தேவனுக்காக உண்மை, பரிசுத்தம், அன்பு மட்டுமே தேவ ராஜ்யத்திற்கு உரியது என்பதையும் கற்று ஜீவனுள்ள தேவனை உண்மையோடும், ஆவியோடும் தொழுதுகொண்டு 24 வருடங்களும் ஊழியத்தை செய்வதற்காக பெலன் கொடுத்து மொன்றியாலில் கர்த்தருக்காக சொந்த ஆலயத்தை கட்டி எல்ல ஜனங்களும் ஆராதிக்கும்படி உதவிசெய்தார். இன்றுவரை நான் கர்த்தாதி கர்த்தருக்கு கோடான கோடி நன்றி செலுத்துகின்றேன். என்னை மிகவும் ஆசீர்வாதத்துடன் தேவன் நடத்தி செல்கின்றார். ஆசீர்வாதமான 2 பிள்ளைகளுக்காகவும், மனைவிக்காகவும் நான் ஆண்டவருக்கு நன்றி கூறுகின்றேன்.